Home Featured உலகம் அமெரிக்கா எங்கும் டிரம்புக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

அமெரிக்கா எங்கும் டிரம்புக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

1267
0
SHARE
Ad

obama-donald-trump-meeting-after-elections

வாஷிங்டன் – இதுவரை இல்லாத அளவுக்கு புதிய அரசியல் சூழ்நிலையில் அமெரிக்கா காலடி எடுத்துள்ளது. அதிபராகத் தேர்வு பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த அமெரிக்க அரசாங்கத்தை அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க, அந்த சம்பிரதாயங்களின் அடிப்படையில் நேற்று வெள்ளை மாளிகை சென்று நடப்பு அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்தார்.

நேற்று வெள்ளை மாளிகையின் ‘ஓவல்’ அலுவலகத்தில் அவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடந்தது. ஒபாமாவை ஒரு நல்ல மனிதர் என வர்ணித்த டிரம்ப், ஒபாமாவின் ஆலோசனையை அடிக்கடி பெறுவதற்குத் தான் உத்தேசித்துள்ளதாகவும் கூறினார். அதிபர் தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கிய பின்னர் அவர்கள் இருவரும் சந்திப்பது இதுவே முதன் முறையாகும்.

#TamilSchoolmychoice

ஆனால், அதே வேளையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் பொதுமக்கள் வீதிகளில் திரண்டு வந்து, தேர்தல் முடிவுகளுக்கு எதிராகவும், டிரம்புக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

பொதுவாக, அமெரிக்க அதிபருக்கான தேர்தல் முடிந்ததும், அனைவரும் தங்களின் வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுவார்கள். ஆனால், இந்த முறை டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து அதன் தாக்கம் இன்னும் நீடித்து வருகின்றது.

குடியரசுக் கட்சியினர் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்க, டிரம்ப் அதிகார மாற்றத்தை சுமுகமாக நடத்துவதற்கும், புதிய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

டிரம்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கலிபோர்னியா மாநிலத்தை மையமாக வைத்து நடந்து வருகின்றன. இதன் காரணமாக, கலிபோர்னியா மாநிலம், அமெரிக்க நாட்டின் கூட்டமைப்பிலிருந்து விலகி விட வேண்டும் என்ற அளவுக்கு பொதுமக்களிடையே விவாதங்கள் வலுத்து வருகின்றன.

(படம்: dpa)