Home Featured வணிகம் 1 எம்டிபி ஊழல்: சிங்கை வங்கியாளருக்கு 18 வார சிறைத் தண்டனை! அபராதம்!

1 எம்டிபி ஊழல்: சிங்கை வங்கியாளருக்கு 18 வார சிறைத் தண்டனை! அபராதம்!

771
0
SHARE
Ad

yak-yew-chee-singapore-ex-bsi-banker

சிங்கப்பூர் – 1 எம்டிபி ஊழல் தொடர்பில் முன்னாள் வங்கியாளரான யாக் இயூ சியூவுக்கு (படம்) 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

57 வயதான யாக் சிங்கையில் மூடப்பட்ட பிஎஸ்ஐ என்ற தனியார் சுவிட்சர்லாந்து வங்கியின் நிர்வாக இயக்குநராவார். போலி ஆவணங்களைத் தயாரித்தது, முக்கியத் தகவல்களை மறைத்தது ஆகிய 4 குற்றச்சாட்டுகள் மீது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

1 எம்டிபி ஊழலில் மையப் புள்ளியாகப் பெயர் குறிப்பிடப்படும் ஜோ லோ என்ற சீன வணிகரைத் திருப்திப் படுத்துவதற்காக இந்த குற்றங்களில் ஈடுபட்டதை யாக் ஒப்புக் கொண்டுள்ளார். ஜோ லோ அமெரிக்காவில் தொடுக்கப்பட 1எம்டிபி மீதான வழக்கிலும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

1mdb-jo-low

சிறைத் தண்டனையோடு சிங்கப்பூர் வெள்ளி 24,000 அபராதமும் யாக்கிற்கு விதிக்கப்பட்டது. மேலும், வங்கியாளராக இருந்து அவர் பெற்ற ஊக்கத் தொகையான (போனஸ்) 7.5 மில்லியன் சிங்கப்பூர் டாலரை அவர் அரசாங்கத்திற்கு திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1எம்டிபி ஊழல் தொடர்பில் சிங்கப்பூரில் நடைபெற்று வரும் வழக்குகளில் வழங்கப்படும் முதல்கட்டத் தண்டனை இதுவாகும்.

பல்வேறு ஊடகங்கள், நாடுகள் குறிப்பிட்டுள்ள ஜோ லோ சிங்கை வழக்குகளில் பெயர் குறிப்பிடப்படுவதும் இது முதல் முறையாகும்.