Home Featured கலையுலகம் ரஜினிகாந்தின் “2.0” முதல் தோற்றம் வெளியீடு!

ரஜினிகாந்தின் “2.0” முதல் தோற்றம் வெளியீடு!

813
0
SHARE
Ad

endiran-2-0-first-look

மும்பை – இந்தியா முழுமையிலும் சினிமா இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இயக்குநர் ஷங்கரின் கைவண்ணத்தில் செதுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் தோற்றம் (ஃபர்ஸ்ட் லுக்) எதிர்வரும் நவம்பர்20-ஆம் தேதி மும்பையில் வெளியீடு காண்கின்றது.

இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக இந்த முதல் தோற்ற வெளியீடு நடைபெறுகின்றது. இந்திப் படவுலகின் பிரபல இயக்குநரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான கரண் ஜோஹார் (படம்) இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

karan-johar-hindi-director

அண்மையில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட ‘ஏய் தில் ஹாய் முஷ்கில்’ இந்திப் படத்தின் இயக்குநர்தான் இந்த கரண் ஜோஹார் (படம்).

இந்தப் படத்தைத் தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருப்பதோடு, மிகப் பிரம்மாண்டமான அளவில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது.endiran-2-0-first-look

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜேக்சன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருடன் இயக்குநர் ஷங்கர், படத் தயாரிப்பாளர் சுபாஷ் கரண் ஆகியோரும் கலந்து சிறப்பிப்பார்கள்.

மேலும், முதன் முறையாக இந்தப் படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழா யூடியூப் மூலமாக நேரலையாக ஒளிபரப்பாகின்றது.

செல்பேசி குறுஞ்செயலி (மொபைல் எப்) மூலமாகவும் இந்த வெளியீட்டு விழாவை இரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

இதுவரை இல்லாத அளவுக்கு புதிய தொழில்நுட்பத்தில் இந்தப் படத்தின் புதிய தோற்றம் வெளியிடப்படும் என ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்துள்ளன.endiran-2-0-first-look-png-feature