கோலாலம்பூர் – நாடெங்கிலும் அதிக எடையோடு தொப்பையுடன் காட்சியளிக்கும் சுமார் 10,000 காவல்துறையினரை அடையாளம் கண்டுள்ள தேசியக் காவல்படை, உடல் எடையைக் குறைக்க 1 வருடம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
1 வருடத்திற்குள் எடை குறைந்து கட்டுக்கோப்பாக வரவில்லை என்றால், அவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து புக்கிட் அம்மான் நிர்வாகப் பிரிவின் இயக்குநர் ஆணையர் சுல்கிப்ளி அப்துல்லா கூறுகையில், நாட்டிலுள்ள 130,000 காவல்துறையினரில் 10,000 பேர் உடல்பருமனாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பார்வையில் அப்படிப்பட்ட அதிக எடை கொண்ட காவல்துறையினர் பணியில் இருப்பது அவ்வளவு நன்றாக இருக்காது என்றும் சுல்கிப்ளி குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தங்களது உடல் எடையைக் குறைக்க 1 வருடம் கால அவகாசம் போதுமானது என்று கூறும் சுல்கிப்ளி, அதற்குள் அவர்கள் தங்களது உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.