புதுடில்லி – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் நடத்தி வரும் இயக்கத்தை 5 ஆண்டுகளுக்குத் தடைவிதித்து, இந்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு இலாகா ஜாகிர் நாயக் மீது குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஜாகிர் நாயக் இயக்கத்துடன் தொடர்பு கொண்ட 10 இடங்களில் தேசியப் புலனாய்வு இலாகா அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது என இந்தியாவின் அதிகாரத்துவ செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் ஜாகிர் நாயக் இயக்கத்தின் அலுவலகங்களை இந்தியக் காவல் துறையினர் முற்றுகையிட்டுள்ளனர். அந்த அலுவலகங்களுக்கு வெளியே காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.