Home Featured நாடு பெர்சே குறித்து சிஎன்என்-நியூயார்க் டைம்ஸ் செய்தி!

பெர்சே குறித்து சிஎன்என்-நியூயார்க் டைம்ஸ் செய்தி!

729
0
SHARE
Ad

cnn-news-mahathir-bersih

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெர்சே பேரணி அனைத்துலக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலகின் முதன்மை தொலைக்காட்சி செய்தி அலைவரிசையான சிஎன்என் இணையத் தளத்தில் பெர்சே குறித்தும், முன்னாள் பிரதமர் துன் மகாதீர் பெர்சே பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறித்தும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

நஜிப்பை வீழ்த்தும் நோக்கில் நடத்தப்படும் பெர்சே பேரணிக்கு தனது ஆதரவை மகாதீர் வழங்கியுள்ள காரணத்தால், பெர்சே பேரணி கூடுதல் வலுவைப் பெற்றுள்ளது என்றும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

காணொளி ஒன்றின் மூலம் தனது ஆதரவாளர்களை பெர்சே பேரணிக்கு ஆதரவை வழங்குமாறு மகாதீர் வேண்டுகோள் விடுத்திருப்பது குறித்தும் சிஎன்என் செய்தி வெளியிட்டிருக்கிறது.

நியூயார்க் டைம்ஸ் செய்தி

அமெரிக்காவின் மற்றொரு முன்னணி ஊடகமான நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் இணையத் தளத்திலும் பெர்சே குறித்த செய்திகளும், பிரதமர் நஜிப்புக்கு எதிராக அமெரிக்காவின் நீதித் துறை தொடுத்துள்ள வழக்கு குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

new-york-times-bersih-5-0-news