Home Featured நாடு பெர்சே: கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் விடுதலை!

பெர்சே: கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் விடுதலை!

728
0
SHARE
Ad

bersih-5-banner

கோலாலம்பூர் – பெர்சே 5.0 பேரணியை முன்னிட்டுக் கைது செய்யப்பட்ட 13 பேர்களில் நேற்று 8 பேரை காவல் துறையினர் விடுதலை செய்துள்ளனர்.

ஜசெகவின் முன்னாள் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியூ, ஜிம்மி வோங், லீ காய் மெங், ஆகியோருடன் மரியான் சின்னுடன் கைது செய்யப்பபட்ட பெர்சே இயக்கத்தைச் சேர்ந்த மண்டீப் சிங், மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த முகமட் லுக்மான் நுல் ஹாகிம், அனிஸ் ஷாபிகா முகமட் யூசுப், முகமட் சஃப்வான் பின் அனாங், பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்த எஸ்.அருட்செல்வன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இவர்களை அனைவரும் காவல் துறை பிணையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

மரியா சின் சொஸ்மா சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

எஞ்சியவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.