Home Featured கலையுலகம் “2.0” முதல் தோற்றம் வெளியீடு! 13 இலட்சம் பார்வையாளர்கள்! (படக்காட்சிகள்)

“2.0” முதல் தோற்றம் வெளியீடு! 13 இலட்சம் பார்வையாளர்கள்! (படக்காட்சிகள்)

1213
0
SHARE
Ad

endiran-2-0-first-look-feature

மும்பை – எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமான “2.0” படத்தின் முதல் தோற்றம் (ஃபர்ஸ்ட் லுக்) நேற்று மும்பையில் ஒரு பிரம்மாண்டமான விழாவில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அக்சய் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2-0-first-look-salman-karan-johar

#TamilSchoolmychoice

சிறப்பு விருந்தினராக சல்மான் கான் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை பிரபல இந்திப்பட இயக்குநர் கரண் ஜோஹார் வழி நடத்தினார்.

endiran-2-0-first-look

முதன் முறையாக, இந்த வெளியீட்டு விழா நிகழ்ச்சி யூடியூப் இணையத் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு இலட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர். இந்த வெளியீட்டு விழாவின் நேரலையை 13 இலட்சக்கும் மேற்பட்டோர் கண்டு களித்ததாக இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.2-0-rajni-kanth-first-look-function

மேலும், இந்த வெளியீட்டு நிகழ்ச்சி தொடர்பான படங்களையும் வெளியிட்டுள்ளது.

வழக்கமாக, இதுபோன்ற நிகழ்ச்சிகள், ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் உரிமம் வழங்கப்பட்டு, அவர்கள் அதனைப் பதிவு செய்து பின்னர் ஓரிரு வாரங்கள் கழித்து தங்களின் அலைவரிசையில் ஒளிபரப்புவார்கள். ஆனால், யூடியூப் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டதால், உலகம் எங்கும் உள்ள  இரசிகர்கள் ஒரே நேரத்தில் நேரடியாகக் கண்டுகளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

2-0-amy-jackson-karan-johar

படத்தின் கதாநாயகி எமி ஜேக்சனுடன் கரண் ஜோஹார்…

தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளிவரப்போகும் “2.0” அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் 3-டி தொழில் நுட்பத்தில் உருவாகி வருகின்றது.

2-0-first-look-akshay-kumar

மிரட்டும் ஒப்பனையுடனான தோற்றத்தில் அக்சய்குமார்….

2-0-first-look-guests

2.0 வெளியீட்டு விழாவில் படத் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், ரஜினிகாந்த், சல்மான் கான், எமி ஜேக்சன், அக்சய் குமார்…

2-0-first-look-rahman-karan-johar

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கரண் ஜோஹார்…

2-0-first-look-rajni

வழக்கம்போல் மிக எளிமையாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய ரஜினி…

2-0-first-look-rajni-salman-akshay

அக்சய் குமார், ரஜினி, சல்மான் கான்

2-0-first-look-shankar-karan-johar

படத்தின் இயக்குநர் ஷங்கருடன் கரண் ஜோஹார்…

2-0-rajni-karan-johar

பட அனுபவம் குறித்து விவரிக்கும் ரஜினி…

endiran-2-0-poster

படத்தின் இன்னொரு கோண முதல் தோற்றம்

(படங்கள்: நன்றி-லைக்கா டுவிட்டர் தளம்)