Home Featured நாடு சிறையில் மரியா முறையாக நடத்தப்படுவார் – காவல்துறை உறுதி!

சிறையில் மரியா முறையாக நடத்தப்படுவார் – காவல்துறை உறுதி!

704
0
SHARE
Ad

maria-chin-bersih-5-arrestedகோலாலம்பூர் – சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, சிறையில் முறைப்படி நடத்தப்படுவார் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது.

இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், “கைதிகளை தங்கும் விடுதி அறையில் வைக்க முடியாது. அவர்களை முறைப்படி தடுத்து வைக்கவும், விசாரணை செய்யவும் தேவையான சட்டங்களும், விதிமுறைகள் உள்ளன. அதனை நாங்கள் பின்பற்ற வேண்டும்.”

“இதுவரை அவருக்கு (மரியாவிற்கு) வழங்கப்பட்டுள்ளவை அனைத்தும், அனைத்துலக நடைமுறைப்படி தான் அளிக்கப்பட்டுள்ளது. சில தரப்பினர் அதற்கு (மரியா முறைப்படி நடத்தப்படுவதற்கு) ஆதாரம் கேட்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அது முறையல்ல. அது நடக்காது. நாங்கள் விசாரணை நடத்தி, அறிந்து கொண்ட தகவல்களை அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடம் ஒப்படைப்போம்” என்று புக்கிட் அம்மான் காவல்துறைத் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் காலிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், தடுப்புக் காவலில் மரியா தவறான முறையில் நடத்தப்படமாட்டார் என்பதைத் தான் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்துவதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.