Home Featured கலையுலகம் எந்திரன்-2 : கலக்கப் போகும் எமி ஜாக்சன்!

எந்திரன்-2 : கலக்கப் போகும் எமி ஜாக்சன்!

1048
0
SHARE
Ad

endiran-2-0-rajini-amy-jackson-salman

சென்னை – படம் வெளிவரப் போவது அடுத்த ஆண்டு தீபாவளிதான் என்றாலும், இந்த ஆண்டே எந்திரன் 2 படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டு விட்டது. மிகப் பிரம்மாண்டமான முறையில் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற ‘2.0’ படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழாவில் நட்சத்திர நடிகர்களுக்கு மத்தியில் கலக்கிய ஒரு நட்சத்திரம் எமி ஜேக்சன்.

எந்திரன் படத்தின் மிக முக்கிய, மைய அம்சமே படத்தின் கதாநாயகி பேரழகி என்பதுதான். அந்த அழகில் ரோபோ மயங்குவதுதான் கதை. இரண்டாவது பாகத்தில் அந்த அழகிக்கான கதாபாத்திரத்தில் வருபவர் எமி ஜாக்சன்.

#TamilSchoolmychoice

பிறப்பால் வெள்ளையரான எமி, ‘மதராசப் பட்டினம்’ படத்தில் வெள்ளைக்காரப் பெண்ணாகவே நடித்து தமிழ்த் திரையுலகில் கால் பதித்தார்.

endiran-amy-jackson-endiran-2-0

எந்திரன் 2.0 முதல் தோற்ற வெளியீட்டு விழாவுக்கு அசத்தலான கவர்ச்சியுடம் வலம் வந்த எமி ஜாக்சன்…

பின்னர் ஷங்கரின் ‘ஐ’ படத்திலும் கதாநாயகியாக நடித்தார். பல படங்களில் நடித்து இந்தியக் கதாநாயகிகளில் ஒருவராகவே மாறிவிட்ட எமி, எந்திரன் இரண்டாவது பாகத்தில் கலக்கப் போகிறாரோ இல்லையோ, படத்தின் முதல் தோற்ற விழாவில் கலக்கலான கவர்ச்சியுடன் வந்து அசத்தி விட்டார்.

அந்த நிகழ்ச்சி படங்களை தனது இன்ஸ்டாகிராம் நட்பு ஊடகத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளார் எமி ஜாக்சன். மேலே நீங்கள் காண்பது அந்தப் படங்களைத்தான்!

தவறாமல் தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களை வெளியிட்டு வருபவர் எமி. சமீபத்தில் அவர் அரை நிர்வாணமாகப் படுத்துக் கிடக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு, இரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்ததோடு, இணையத் தளங்களில் அந்தப் படம் அதிகமாகப் பகிரப்படுவதற்கும் காரணமானார்.