Home Featured நாடு மருத்துவமனையில் கலைஞர்!

மருத்துவமனையில் கலைஞர்!

872
0
SHARE
Ad

karunanithi

சென்னை – உடல் நலக் குறைவால் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னையைப் புயலும் மழையும் தாக்கக் கூடும் என்ற வானிலை அறிவிப்புகள் வெளியாகி இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், கலைஞரைக் காண கட்சிக்காரர்கள் திரள வேண்டாம் எனவும், அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் திமுக தலைமையக அறிக்கை ஒன்று தெரிவித்தது.

அதே வேளையில் நேற்று மாலை பிரபல நடிகை குஷ்பு மருத்துவமனை சென்று கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்ததாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கலைஞர் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், ஓரிரு நாளில் அவர் இல்லம் திரும்புவார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.