யாங்கூன் – மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை யாங்கூனில் மியன்மார் தேசிய துறவிகள் சங்கத்தைச் சேர்ந்த 100 பேர் போராட்டம் நடத்தினர்.
ஆசியானின் மதிப்பை நிலைநிறுத்தத் தவறிய நஜிப் துன் ரசாக்கை கண்டிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் மியன்மார் வெளியுறவுத்துறை அமைச்சிற்கும், ஆசியான் குழுவிற்கும் கோரிக்கை விடுத்தனர்.
மியன்மாரின் ராகின் மாநிலத்தில், ரோஹின்யா முஸ்லிம்கள் வதைக்கப்படுவதை எதிர்த்து நேற்று ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூரில் அம்னோ மற்றும் பாஸ் தலைவர்கள் பங்கேற்க, பிரதமர் நஜிப் தலைமையில் சுமார் 10,000 பேர் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து நஜிப்புக்கு எதிராக மியன்மாரில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மியன்மார் வரலாற்றில் ரோஹின்யா என்ற இனமே இல்லை என்றும், தீவிரவாதிகளுக்காக நஜிப் ஆதரவு தர வேண்டாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.