Home Featured நாடு ‘700,000 சீனர்களுக்கு அடையாள அட்டை’- தனது கருத்தைத் தற்காக்கும் மகாதீர்!

‘700,000 சீனர்களுக்கு அடையாள அட்டை’- தனது கருத்தைத் தற்காக்கும் மகாதீர்!

757
0
SHARE
Ad

Tun Mahathirகோலாலம்பூர் – வரும் 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, ஜோகூர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 700,000 சீனப் பிரஜைகளுக்கு மலேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது என்று தான் கூறிய கருத்தை மீண்டும் தற்காத்துப் பேசியிருக்கிறார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்.

மலேசியாவில் வெளிநாட்டினர் மலேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் சம்பவங்கள் ஏற்கனவே உள்ளது என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

“எனவே, அவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படுவார்கள் என்று நான் கூறியதில் அபத்தம் இல்லை” என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ மொகமட் காலிட் நோர்டினுக்குப் பதிலளிக்கும் வகையில் மகாதீர் தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக காலிட் வெளியிட்ட கருத்தில், மகாதீர் கூறும் குற்றச்சாட்டு அர்த்தமில்லாத ஒன்று என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.