சென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 3.00 மணி நிலவரம்) வார்தா என பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் புயல் தமிழகத்தின் கரையை நோக்கி, மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில், இன்று திங்கட்கிழமை பிற்பகல் தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னையில் கடும் மழை பெய்து வருவதோடு, புயல் காற்றும் வீசத் தொடங்கியுள்ளது.
தமிழக அரசு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக, தமிழக அரசு எதிர்நோக்கிய சவால்கள், அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், தமிழக அரசு தற்போது முழு தயார் நிலையில் இயங்கி வருகின்றது.
இதற்கிடையில், இந்திய இராணுவமும் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளையும் வார்தா புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.