Home Featured உலகம் நியூசிலாந்து பிரதமராக பில் இங்கிலிஷ் தேர்வு!

நியூசிலாந்து பிரதமராக பில் இங்கிலிஷ் தேர்வு!

706
0
SHARE
Ad

bill-english-new-zealand-pm

வெல்லிங்டன் – பரவலாக எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று நியூசிலாந்தின் புதிய பிரதமராக பில் இங்கிலிஷ் (படம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளும் கன்சர்வேடிவ் நேஷனல் கட்சி கூட்டணியின் தலைவராக 54 வயதான பில் இன்று திங்கட்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரது துணைத் தலைவராக பாவ்லா பென்னட் என்ற பெண்மணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“எனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு குறித்து உற்சாகமடைந்துள்ளேன். பணிவுடன் ஏற்றுக் கொள்கின்றேன்” என தனது தேர்வுக்குப் பின்னர் பேசிய பில் கூறினார். அதே வேளையில் தனக்குத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பாவ்லா திறமையானவர், சிறந்த முறையில் பணியாற்றக் கூடிய ஆற்றல் வாய்ந்த பெண் என்றும் நேஷனல் கட்சியின் முதலாவது பெண் துணைத் தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

பில் இங்கிலிஷ் பிரதமராகவும், பாவ்லா பென்னட் துணைப் பிரதமராகவும் இன்று பதவியேற்கின்றனர்.

நியூசிலாந்தின் பிரதமராக இருந்த ஜோன் கீ கடந்த திங்கட்கிழமை, தனது சொந்தப் பிரச்சனைகளைக் காரணம் காட்டி பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுகின்றார். 4.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டின் பிரதமராக  2008 முதல் ஜோன் கீ பணியாற்றி வந்தார்.