Home Featured தமிழ் நாடு வார்தா புயல் சென்னையை வாட்டியெடுத்தது! 2 பேர் மரணம்!

வார்தா புயல் சென்னையை வாட்டியெடுத்தது! 2 பேர் மரணம்!

731
0
SHARE
Ad

சென்னை – இன்று திங்கட்கிழமை பிற்பகலில் தமிழகத்தின் கடலோரங்களைத் தாக்கிய வார்தா புயல் சென்னை மாநகரை உலுக்கியுள்ளது. மலேசிய நேரம் இரவு 7.30 மணி வரையிலான நிலவரங்கள் வருமாறு:

vardah-storm-rayapettai

சென்னை இராயப்பேட்டை பகுதியில் வார்தா புயலால் விழுந்த மரம் ஒன்று அகற்றப்படுகின்றது…

  • சென்னை மாநகரில் பல இடங்களில் நூற்றுக் கணக்கான மரங்கள் வார்தா புயல் தாக்குதலால் விழுந்துள்ளன. பல இடங்களில் மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக, சென்னை நகரின் பல இடங்களில் போக்குவரத்துகள் நிலைகுத்தின.
  • சென்னையில் மின்சார இரயில் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
  • இந்திய நேரப்படி இரவு 8.00 மணி வரை கடும் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தின் கரையோரப் பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 7 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதே போன்று ஆந்திரப் பிரதேசக் கடலோரத்தில் இருந்து சுமார் 9 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
#TamilSchoolmychoice

vardah-storm-trees

சென்னை முகப்பேர் பகுதியில் வார்தா புயலால் சாலையின் குறுக்கே விழுந்த மரம் அப்புறப்படுத்தப்படுகின்றது….

  • இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் சென்னைக்கான அல்லது சென்னையிலிருந்து புறப்படும் தனது அத்தனை பயணங்களையும் இரத்து செய்துள்ளது.
  •  இரண்டு கப்பல்களுடனும், 5 ஆயிரம் பேருக்குத் தேவையான உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகளுடனும் இந்தியக் கடற்படை தயார் நிலையில் இருந்து வருகின்றது.
  • 30 முக்குளிப்பு குழுக்கள் (டைவிங்) மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • சென்னைக்கு அருகிலுள்ள தாம்பரத்திலுள்ள இந்திய விமானப் படைத் தளமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
  • தேசிய பேரிடர் மீட்புப் படையின் சார்பாக 15 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • இந்திய இராணுவத்தின் 7 பிரிவுகள் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
  • பாதிப்படைந்த பொதுமக்களை எதிர்கொள்ள 174 நிவாரண மையங்கள் தமிழகமெங்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • இதுவரை புயல் தாக்குதலால் 2 பேர் மரணமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், விவரங்கள் வெளியிடப்படவில்லை.

vardah-storm-help-line

வார்தா புயல் தொடர்பில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கான நடவடிக்கை மையங்களின் அவசர தொலைபேசி எண்கள்….