Home Featured நாடு அரியணை அமர்ந்தார் புதிய மாமன்னர்!

அரியணை அமர்ந்தார் புதிய மாமன்னர்!

1426
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பாரம்பரிய முறைப்படியான சடங்குகளோடு இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கிளந்தான் மாநிலத்தின் சுல்தான் முகமட் அதிகாரபூர்வமாக. 15-வது மலேசிய மாமன்னராக, அரியணையில் அமர்ந்தார்.

najib-sultan-muhammad-new-agong

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற மாமன்னர் அரியணை அமரும் சடங்குகளில் பிரதமர் நஜிப் புதிய மாமன்னரை வரவேற்கின்றார்…

#TamilSchoolmychoice

துணை மாமன்னராக பேராக் மாநிலத்தின் சுல்தான் நஸ்ரின் ஷா பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

47 வயதான கிளந்தான் சுல்தான், நேற்று திங்கட்கிழமை பதவி விலகிச் சென்ற கெடா சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷாவுக்கு அடுத்த மாமன்னராக அரியணை அமர்கின்றார்.

agong-installation-elephant-procession

மாமன்னர் அரியணை அமரும் விழாவில் யானைகளின் அணிவகுப்பு….

கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற்ற சுல்தான்களின் மாநாட்டில் கிளந்தான் சுல்தான் புதிய மாமன்னராகவும், பேராக் சுல்தான் துணை மாமன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய மாமன்னர் அரியணை அமரும் விழாவை முன்னிட்டு இன்று சுல்தான்களின் மாநாடும் மாமன்னர் மாளிகையில் நடைபெற்றது.

agong-kelantan-sultan

மலேசியாவின் 15-வது மாமன்னர் கிளந்தானின் சுல்தான் முகமட்