சென்னை – நடிகர் தனுஷ் தற்போது தான் இயக்கி வரும் ‘பவர் பாண்டி’ படத்தில், ஒரு நல்ல கதாப்பாத்திரத்தில் நடிக்க ‘திருடா திருடி’ திரைப்படத்தில் தன்னுடன் நடித்த சாயா சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சாயா சிங், திருடா திருடி இயக்குநர் சுப்பிரமணிய சிவா மூலமாகத் தனக்கு இந்த வாய்ப்பு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், படப்பிடிப்பில் தனுஷ் ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குநர் போல் செயல்படுவதாகவும், குழந்தை மாதிரி உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
#TamilSchoolmychoice
தனுசும், சாயா சிங்கும் ‘திருடா திருடி’ படத்தில் ஆடிய மன்மதராசா பாடல் அந்த சமயத்தில் பட்டி தொட்டி எங்கும் மிகப் பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.