Home Featured தமிழ் நாடு “சிலரின் தூண்டுதலால் நான் தடுக்கப்பட்டேன்” – வைகோ குற்றச்சாட்டு

“சிலரின் தூண்டுதலால் நான் தடுக்கப்பட்டேன்” – வைகோ குற்றச்சாட்டு

803
0
SHARE
Ad

vaiko

சென்னை – நேற்று சனிக்கிழமை மாலை திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரிக்க வந்தபோது தனக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும், கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், ஒரு சிலரின் தூண்டுதலால் நடத்தப்பட்டது என்றும் உண்மையான திமுக தொண்டர்கள் அவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள் என்றும் பதில் கூறி வைகோ கண்ணியம் காத்துள்ளார்.

“நான் வருவது முன்கூட்டியே திமுகவினருக்குத் தெரியும். அங்கு எங்களால் ஒரு பிரச்சனையும் நேரவில்லை. நாங்கள் பொறுமையும் அமைதியும் காத்தோம். அவர்கள் அடித்தாலும் வாங்கிக் கொள்வோம். திருப்பி அடிக்கக்கூடாது என என்னுடன் வந்தவர்களுக்கு நான் கட்டளையிட்டிருந்தேன். அங்கு நடந்தது ஒரு சிலரின் தூண்டுதலால் நடைபெற்ற சம்பவம்” என்றும் வைகோ நேற்று காவேரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து கருத்துரைத்தார்.

#TamilSchoolmychoice

கலைஞர் விரைவில் உடல் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வைகோ மீது காட்டப்பட்ட எதிர்ப்பு சம்பவம் குறித்து திமுக தலைமை வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் சார்பில் டிகேஎஸ்.இளங்கோவன் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துக் கூறினார் .

மு.க.ஸ்டாலினும் வைகோவுக்கு நிகழ்ந்த அசம்பாவிதத்துக்கு திமுக தொண்டர்களைக் கண்டித்துள்ளார்.