Home Featured நாடு சுனார் பிணையில் விடுதலை!

சுனார் பிணையில் விடுதலை!

672
0
SHARE
Ad

zunar-cartoonistகோலாலம்பூர் – நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட கேலிச்சித்திர ஓவியர் சுனார் நேற்றிரவே பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு பேரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று நள்ளிரவு வாக்கில் விடுதலை செய்யப்பட்டனர்.

சுமார் 6 மணி நேரம், தான் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்ட பிறகு நள்ளிரவில் பிணையில் (ஜாமீன்) விடுதலை செய்யப்பட்டதாகவும், எதிர்வரும் 30 டிசம்பர் 2016-இல் மீண்டும் காவல் துறை விசாரணைக்கு வரவேண்டும் என்றும் சுனார் தெரிவித்துள்ளார்.

சுல்கிப்ளி அன்வார் உல்ஹாக் என்ற இயற்பெயர் கொண்ட சுனார், தனது 1,000 நூல்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மதிப்பு சுமார் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் என்றும் தெரிவித்துள்ளார். அந்த நூல்கள் விரைவில் தடை செய்யப்படும் என காவல் துறை தன்னிடம் தெரிவித்ததாகவும் சுனார் கூறியுள்ளார்.