ஆனால் அங்குள்ள மதவாத அமைப்புகள் சில அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலையை அகற்ற வைத்தனர்.
அதனையடுத்து, அச்சிலை அம்மாநில பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. இச்சம்பவம் தமிழர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் இச்சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் உத்தரவின் படி, அச்சிலையை மீண்டும் நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அம்முயற்சி வெற்றியடைந்து இன்று திங்கட்கிழமை மாலை அச்சிலை மீண்டும் நிறுவப்படவுள்ளது.
அதனை உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் திறந்து வைக்கவுள்ளார்.
Comments