Home Featured வணிகம் ஏடிஎம் அட்டைகளைப் புதுப்பிக்க கட்டணம் இல்லை: பேங்க் நெகாரா

ஏடிஎம் அட்டைகளைப் புதுப்பிக்க கட்டணம் இல்லை: பேங்க் நெகாரா

1178
0
SHARE
Ad

bank-negaraகோலாலம்பூர் – ஏடிஎம் அட்டைகளைப் புதுப்பிக்க கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுவதை பேங்க் நெகாரா மறுத்துள்ளது.

ஏடிஎம் அட்டைகளைப் புதுப்பிக்க எந்தக் கட்டணமும் இல்லை என்றும், இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் பேங்க் நெகாரா தெரிவித்துள்ளது.

“மலேசியாவிலுள்ள ஏடிஎம் அட்டைகள், பற்று அட்டைகளாக இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. அதன் படி, முக்கிய இடங்களில் விற்பனை மையங்களில் பொருட்களை வாங்கவும் பயன்படுத்தலாம்”

#TamilSchoolmychoice

“இன்னும் ஏடிஎம் அட்டைகளைப் புதுப்பிக்காதவர்கள் தொடர்ந்து அதனை ரொக்கப் பணம் எடுக்கப் பயன்படுத்தலாம்” என்று பேங்க் நெகாரா இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.