Home Featured நாடு பன்னீர் செல்வம், சசிகலாவைச் சந்தித்து டாக்டர் சுப்ரா இரங்கல்!

பன்னீர் செல்வம், சசிகலாவைச் சந்தித்து டாக்டர் சுப்ரா இரங்கல்!

877
0
SHARE
Ad

subra-meeting-ops

சென்னை – தமிழக முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வத்தை, மலேசியாவின் சுகாதார அமைச்சரும்,  மஇகாவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி, மலேசிய அரசாங்கத்தின் சார்பிலும், மலேசிய இந்தியர்களின் சார்பிலும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது, சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதரகத்தின் பொறுப்பாளர் (Consulate General) அகமட் ஃபஜாராசாம் அப்துல் ஜாலில் உடனிருந்தார்.

#TamilSchoolmychoice

சசிகலாவுடன் சுப்ரா சந்திப்பு

தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தைச் சந்தித்ததோடு, டாக்டர் சுப்ரா, சென்னை போயஸ் கார்டனிலுள்ள ஜெயலலிதா இல்லம் சென்று அவரது தோழி சசிகலாவை மரியாதை நிமித்தம் நேரில் சந்தித்து ஜெயலலிதா மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

மறைந்த ஜெயலலிதாவுக்குப் பதிலாக அடுத்த அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.