Home Featured தமிழ் நாடு சசிகலாவை நடிகர் அஜித் சந்தித்தாரா?

சசிகலாவை நடிகர் அஜித் சந்தித்தாரா?

758
0
SHARE
Ad

Thala-Ajithசென்னை – மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை நடிகர் அஜித் நேற்று திங்கட்கிழமை, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில்  மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார் என தமிழகத்தின் சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கின்றது.

ஆனால், இது குறித்த எந்தவித புகைப்படங்களும் வெளியிடப்படவில்லை. வழக்கமாக, சசிகலாவைப் பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறும் புகைப்படங்கள், அனைத்திந்திய அண்ணா திமுக டுவிட்டர் தளத்திலும், ஜெயா தொலைக்காட்சி வலைத் தளத்திலும் வெளியிடப்பட்டு வருகின்றது. ஜெயா தொலைக்காட்சியும் அத்தகைய காட்சிகளை ஒளிபரப்புவது வழக்கம்.

ஆனால், அஜித் சந்திப்பு குறித்த புகைப்படம் எதுவும் வெளியிடப்படாத நிலையில், சசிகலாவை அஜித் சந்திக்கவில்லை என்றும் ஒரு டுவிட்டர் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அஜித்தின் பொது உறவு நிர்வாகி எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சுரேஷ் சந்திரா என்பவரின் டுவிட்டர் தளத்தில் அவரது ‘டன் சேனல் 1’ (Done Channel 1) என்ற நிறுவனத்தின் சார்பில் அஜித் சசிகலாவைச் சந்தித்தார் என்ற செய்தியில் உண்மையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ajith-sasikala-meet-twitter-page-denial

ஜெயலலிதா சமாதியில்  மரியாதை செலுத்திய அஜித்

ஜெயலலிதா மறைந்தபோது, பல்கேரிய நாட்டில் படப்பிடிப்பில் இருந்த காரணத்தால் அஜித், இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் பல்கேரியாவில் இருந்தபடி, தனது இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்தார்.

பின்னர் நாடு திரும்பியதும், விமான நிலையத்திலிருந்து நேராக, ஜெயலலிதாவின் சமாதிக்கு தனது மனைவி ஷாலினியுடன் சென்று அஜித் மரியாதை செலுத்தினார்.