Home Featured நாடு பயிற்சி இன்றி ஆணுறுப்பு அறுவை சிகிச்சையா? – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

பயிற்சி இன்றி ஆணுறுப்பு அறுவை சிகிச்சையா? – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

690
0
SHARE
Ad

surgeryகோலாலம்பூர் – கடந்த இரு வாரங்களில் இரண்டு தனியார் மருத்துவ மையங்களில் ஆணுறுப்பு முன் தோல் நீக்கும் அறுவை சிகிச்சையின் (circumcision) போது ஏற்பட்ட விபத்துகளையடுத்து, முறையான பயிற்சியும், உபகரணங்களுக்கு இல்லாமல் அது போன்ற சிகிச்சைகளை மருத்துவ மையங்கள் வழங்கக்கூடாது என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மலேசிய சுகாதாரத்துறை பொது இயக்குநர் டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் மற்றும் பொது மருத்துவ மையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், அது போன்ற சிகிச்சைகளை வழங்க போதுமான பாதுகாப்புப் பயிற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.”

“இது ஒரு எளிமையான சிகிச்சை முறையாக இருந்தாலும் கூட, தவறுகள் நடந்தால் அது நோயாளிகளுக்கு மிகவும் கடுமையாகவும், பேரழிப்பாகவும் இருக்கும்” என்று டாக்டர் நூர் ஹிசாம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice