Home Featured இந்தியா பிரவாசி இளைஞர் மாநாடு: இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு தங்கு தடையில்லா வாய்ப்புகள்!

பிரவாசி இளைஞர் மாநாடு: இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு தங்கு தடையில்லா வாய்ப்புகள்!

1355
0
SHARE
Ad

ypbdபெங்களூர் – பிரவாசி பாரதிய திவாஸ் 2017-ன் இளைஞர் மாநாடு இன்று ஜனவரி 7-ம் தேதி, சனிக்கிழமை, பெங்களூர் அனைத்துலகக் கண்காட்சி அரங்கில் கோலாகமாகத் துவங்கியது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் துவக்கி வைத்த இம்மாநாட்டில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெனரல்.விகே சிங், சுரினாம் நாட்டின் துணை அதிபர் மைக்கேல் அஸ்வின் சத்தியந்திரே அதின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் உரையாற்றுகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வகுத்துள்ள வளர்ச்சிப் பாதையுடன் இணைந்து இந்திய இளைஞர்கள் செயலாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இளைஞர் எழுச்சி பெற்று தங்களின் நோக்கம் நிறைவேறும் வரை முயற்சியைக் கைவிடக் கூடாது என்றும் விஜய் கோயல் குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2017-ம் ஆண்டு ‘சாதனையாளர்கள்’ பட்டியலில், உலக உருமாற்றத்தில், 30 வயதிற்கும் குறைவான 30 இந்திய வம்சாவளி இளைஞர்கள் இடம்பிடித்திருப்பதை சுட்டிக் காட்டிய விஜய் கோயல், இந்திய இளைஞர்கள் முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்று தெரிவித்தார்.

இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு தங்கு தடையற்ற வாய்ப்புகள் 

pravasiஇம்மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெனரல் விகே. சிங் உரையாற்றுகையில், உலகிற்கு இந்தியா வரம்பற்ற வாய்ப்புகளை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், எந்த ஒரு நாட்டிற்கும் திறமை, தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் குழுப் பணிகள் தான் அடிப்படைச் சொத்து என்று குறிப்பிட்ட விகே.சிங், இந்தியாவிற்கு அது மிகுதியாகவே உள்ளதாகத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவாதேகர், உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளி மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர தங்கு தடையில்லா வாய்ப்புகள் இந்தியா ஏற்படுத்திக் கொடுப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், கல்வி ஆவணங்களைச் சரிபார்க்க தேசிய கல்விக் களஞ்சியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரகாஷ் அறிவித்தார்.

எனவே, வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளி மாணவர்கள், இந்தியாவின் கல்வி உதவித் தொகைகளைப் பயன்படுத்தி கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டை அடையுமாறு பிரகாஷ் வலியுறுத்தினார்.

நேரடிச் செய்திகள் -ஃபீனிக்ஸ்தாசன்