Home Featured தமிழ் நாடு சசிகலாவுடன் நாஞ்சில் சம்பத் சந்திப்பு!

சசிகலாவுடன் நாஞ்சில் சம்பத் சந்திப்பு!

749
0
SHARE
Ad

nanjil sambath

சென்னை – அதிமுகவிலிருந்து விலகலாம் என்றும் பொது வாழ்வில் இருந்து ஒதுங்கிக் கொள்ளப் போகின்றேன் என்றும் சசிகலாவை எனக்குத் தெரியாது என்றும் தொடர்ந்து ஊடகங்களில் அதிரடியாக உலா வந்த அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், திடீரென இன்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார்.

ஏற்கனவே அவர் ஜெயலலிதா தனக்கு வழங்கிய இன்னோவா காரை அதிமுக தலைமையகத்தில் ஒப்படைத்து விட்டார்.

#TamilSchoolmychoice

இன்று சசிகலாவைச் சந்தித்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சம்பத், தொடர்ந்து அதிமுகவில் நீடிப்பேன் என அறிவித்துள்ளார். “சசிகலாவின் தலைமையை ஏற்று மாநிலம் முழுவதிலும் மீண்டும் பிரச்சாரங்களில் ஈடுபடுவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.