Home Featured நாடு அட்னான் சாத்திம் மறைவு: நாளை சரவாக் மாநிலத்தில் பொதுவிடுமுறை

அட்னான் சாத்திம் மறைவு: நாளை சரவாக் மாநிலத்தில் பொதுவிடுமுறை

670
0
SHARE
Ad

adenan-satim-decd

கூச்சிங் : சரவாக் மாநில முதல்வர் அட்னான் சாத்திம் இன்று பிற்பகல் மறைந்ததை முன்னிட்டு நாளை சரவாக் மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்னான் மறைவு தொடர்பான அண்மையச் செய்திகள் வருமாறு:

  • இன்று பிற்பகல்1.24 மணியளவில் இருதயக் கோளாறு காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் காலமான அட்னானுக்கு நாளை கூச்சிங்கிலுள்ள மஸ்ஜிட் ஜாமெக் பள்ளிவாசலில் அரசாங்க சார்பிலான இறுதி மரியாதை செலுத்தப்படும்.
  • அட்னானின் மறைவுக்கு தனது அனுதாபங்களைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள பிரதமர் நஜிப் துன் ரசாக், நாடு ஒரு சிறந்த தலைவரை இழந்து விட்டது என்றும் தான் கூச்சிங் நகருக்கு இறுதி மரியாதை செலுத்த செல்லப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
  • துணை முதல்வராகத் தற்போது செயல்படும் அபாங் ஜொஹாரி அடுத்த சரவாக் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • தற்காப்பு அமைச்சரான ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் இன்றிரவு சரவாக் செல்லப் போவதாக அறிவித்துள்ளார்.
  • பல தரப்புகளில் இருந்தும் அனுதாபச் செய்திகள் அட்னானுக்கு குவிந்து கொண்டிருக்கின்றன.