Home Featured கலையுலகம் இன்ஸ்டாகிராம் பதிவுகள் – ஜெனிபர் லோப்பஸ்

இன்ஸ்டாகிராம் பதிவுகள் – ஜெனிபர் லோப்பஸ்

886
0
SHARE
Ad

Instagram - Jennifer lopez

இன்ஸ்டாகிராம் என்ற குறுஞ்செயலியின் வழி தங்களின் தனிப்பட்ட புகைப்படங்களை செல்பேசிகளில் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் தற்போது பிரபலங்களிடையே அதிகரித்து வருகின்றது.

இன்ஸ்டாகிராம் என்பது புகைப்படங்களை பயனர்கள் தங்களுக்கிடையில் பரப்பிக் கொள்ளும், பகிர்ந்து கொள்ளும் ஒரு குறுஞ்செயலியாக (Mobile app) பிரபலமடைந்து, கோடிக்கணக்கானவர்களை ஈர்த்துள்ளது.

#TamilSchoolmychoice

ஊடகங்களின் பல செய்திகள் இப்போதெல்லாம் இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் புகைப்படங்களின் அடிப்படையில் எழுதப்படுகின்றன அல்லது பின்னப்படுகின்றன.

அந்த வகையில் முழுவதும் வெண்ணிறம் கொண்ட உடையோடு, வெண்ணிற உட்புறம் கொண்ட கார் இருக்கையில் அமர்ந்து கொண்டு,  அண்மையில் பிரபல ஹாலிவுட் நடிகையும், மேடைப் பாடகியுமான ஜெனிபர் லோப்பஸ் பகிர்ந்து கொண்டுள்ள புகைப்படம்தான் மேலே காண்பது!