Home Featured நாடு சுங்கை பூலோ – காஜாங் எம்ஆர்டி: 1 மாத இலவச சேவை நிறைவு!

சுங்கை பூலோ – காஜாங் எம்ஆர்டி: 1 மாத இலவச சேவை நிறைவு!

785
0
SHARE
Ad

mrt-launchகோலாலம்பூர் – சுங்கை பூலோ – காஜாங் எம்ஆர்டி 1 மாத இலவசப் பயணம் இன்று திங்கட்கிழமையோடு நிறைவடைகின்றது. நாளை முதல் பயணங்களுக்கு ஏற்றவாறு கட்டண அமைப்பின் படி, 1.20 ரிங்கிட் முதல் 3.90 ரிங்கிட் வரை கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

இது குறித்து ரேப்பிட் ரெயில் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் தங்களது பயணங்களை எளிதாக்க, ‘டச் அண்ட் கோ’ அட்டைகளை வாரம் அல்லது மாதங்களின் அடிப்படையில் வாங்கிப் பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

வாரநாட்களில் காலை 6 மணி தொடங்கி, நள்ளிரவு வரை இயக்கப்படவுள்ள எம்ஆர்டி சேவை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி தொடங்கி இரவு 11.30 மணி வரை இயக்கப்படவுள்ளது.

#TamilSchoolmychoice