Home Featured தமிழ் நாடு விஸ்வரூபம் எடுக்கும் ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் போராட்டம்!

விஸ்வரூபம் எடுக்கும் ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் போராட்டம்!

516
0
SHARE
Ad

Jallikatt3 (1)சென்னை – ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகமெங்கும் முக்கிய மாவட்டங்களில் இளைஞர்களின் போராட்டம் வலுவடைந்து வருகின்றது.

சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மெரினா கடற்கரையில் சுமார் 5000 இளைஞர்கள் ஒன்று கூடி  செல்போன்களின் விளக்குகளை காட்டி தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

அதே போல், மதுரை, திருச்சி நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இளைஞர்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

சரத்குமார் விரட்டியடிப்பு:

இதனிடையே, வாடிப்பட்டி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாருக்கு எதிராக அங்கு போராட்டக்காரர்கள் கோஷமிட்டதால், அங்கிருந்து சரத்குமார் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தான் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கவே வந்ததாகக் குறிப்பிட்டார்.

கல்லூரி மாணவர்கள்  போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று புதன்கிழமை கல்லூரிகள் பலவற்றில் மாணவர்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து அமைதிப் போராட்டம் நடத்தவுள்ளனர். இதனால் கல்லூரிகள், பொதுஇடங்களில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நடிகர்கள் ஆதரவு

ஜல்லிக்கட்டிற்கு தமிழ் திரைப்பட நடிகர்கள், இசையமைப்பாளர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகின்றது. ஏற்கனவே ஹிப்ஹாப் தமிழா ஆதி, நடிகர் சிம்பு, உள்பட முக்கியக் கலைஞர்கள் இப்போராட்டத்தில் தீவிரமாகக் களமிறங்கியிருக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷ், ஆ.ஜே.பாலாஜி அகியோரும் தற்போது களத்தில் இறங்கிப் போராடி வருகின்றனர்.