Home Featured தமிழ் நாடு தமிழ் உணர்வோடு போராடிய இளைஞர்களுக்கு தலை வணங்குகிறேன்: நடிகர் விஜய்

தமிழ் உணர்வோடு போராடிய இளைஞர்களுக்கு தலை வணங்குகிறேன்: நடிகர் விஜய்

866
0
SHARE
Ad

Vijayசென்னை – ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய அத்தனை இளைஞர்களின் தமிழ் உணர்விற்குத் தலை வணங்குவதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் விஜய் காணொளி ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“உலகம் பூரா சட்டம் உருவாக்குனது, மக்களுடைய கலாசாராத்தையும் உரிமையையும் பாதுகாக்கத்தான், பறிப்பதற்கு அல்ல. தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பார்க்காமல், யாருடைய தூண்டுதலும் இல்லாமல், எந்தவித கட்சி பேதம் இன்றி தமிழ் என்ற ஒரே உணர்வோடு, இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை இளைஞர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்.இது சம்பந்தமா கைது செய்யப்பட்ட எல்லாத்தையும் வெளிய அனுப்பீட்டா, நான் சந்தோசப்படுவேன். இவ்வளவுக்கும் காரணமான அமைப்ப வீட்டுக்கு அனுப்பீட்டா , தமிழ்நாடு சந்தோஷப்படும்”. என்று விஜய் தெரிவித்தார்.