Home Featured நாடு கம்பன் – கண்ணதாசன் பயிலரங்கம் தொடக்க விழா!

கம்பன் – கண்ணதாசன் பயிலரங்கம் தொடக்க விழா!

1001
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ‘நாம்’ அறவாரியத்தின் ஏற்பாட்டில், செடிக் ஆதரவில் நடைபெறும் ‘கம்பன்-கண்ணதாசன்’ இலக்கியப் பயிலரங்கம் தொடர் நிகழ்ச்சிகளின் தொடக்க விழா இன்று புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறுகின்றது.

saravanan-naam-kamban-kannadasan-payilarangam

இந்த நிகழ்ச்சி குறித்த விவரங்களை நாம் நிறுவனரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், இளைஞர், விளையாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன், இன்று காலை 9.30 மணிக்கு அஸ்ட்ரோவின் விண்மீன் மற்றும் வானவில் அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பாகும் நேர் காணலில் வழங்குவார்.

#TamilSchoolmychoice

நாளை 19 ஜனவரி வியாழக்கிழமை மாலை நடைபெறும் கம்பன்-கண்ணதாசன் பயிலரங்கத்தின் தொடக்க விழாவில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் இலக்கியச் சுடர் வழக்கறிஞர் த.இராமலிங்கம் மற்றும் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் உரையாற்றுவர்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இந்தப் பயிலரங்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் தமிழார்வமும், தமிழ் இலக்கிய முயற்சிகளும் வளர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.