Home Featured உலகம் தவறுதலாகக் குண்டுபோட்டு 100 அகதிகளைக் கொன்ற நைஜிரிய இராணுவம்!

தவறுதலாகக் குண்டுபோட்டு 100 அகதிகளைக் கொன்ற நைஜிரிய இராணுவம்!

809
0
SHARE
Ad

nigeria-map

அபுஜா (நைஜிரியா) – நேற்று செவ்வாய்க்கிழமை போக்கோ ஹாராம் தீவிரவாதிகளின் முகாம்களை அழிப்பதற்குப் புறப்பட்ட நைஜிரிய இராணுவ விமானம் ஒன்று,  தவறுதலாக  போக்கோ ஹாராம் என நினைத்து அகதிகள் முகாம் ஒன்றின் மீது குண்டுமழை பொழிந்ததில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அகதிகள் முகாமில் அகதிகளுக்கு உதவுவதற்காக சேவையில் ஈடுபட்டிருந்த செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மருத்துவர் குழுவைச் சேர்ந்த சேவையாளர்கள் பலரும் காயமடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அண்டை நாடான கேமரூனுக்கு அருகில் உள்ள எல்லைப் பகுதியில் இந்த தவறுதலான விமானப் படைத் தாக்குதல் நடைபெற்றது.

இதுகுறித்து விசாரணைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.