Home Featured தமிழ் நாடு இன்னும் சில மணி நேரத்தில் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்!

இன்னும் சில மணி நேரத்தில் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்!

610
0
SHARE
Ad

jallikkatu-protest-japan

சென்னை – ‘தமிழன்டா’ என ஒவ்வொரு உலகத் தமிழனும் தோள்தட்டி, நெஞ்சு நிமிர்த்தி கூறிக் கொள்ளும் வண்ணம், ஜல்லிக்கட்டு காளைக்காக, ஊன் உறக்கமின்றி போராட்டக் களம் கண்ட இளம் தமிழ்க் காளைகளின் வெற்றி முழக்கம் ஒலிப்பதற்கு இன்னும் சில மணி நேரம்தான் இருக்கிறது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்பிலான அண்மைய நிலவரச் செய்திகள்:

  • உலக நாடுகளில் உள்ள தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஜப்பானிலும் (மேலே படம்) தமிழர்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  முழக்கமிட்டுள்ளனர்.
  • புதுடில்லியிலுள்ள இந்திய அதிபர் மாளிகையில் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தலைமையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தனர். அவசரச் சட்டத்திற்கான ஒப்புதலை வழங்குமாறு அதிபரை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.
  • தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், தமிழக அரசின் அமைச்சர்களுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் கலந்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
  • தமிழக ஆளுநர் இன்று மாலை 4.00 மணியளவில் (இந்திய நேரம்) சென்னை வந்தடைகின்றார். தொடர்ந்து அவசரச் சட்டத்திற்கான ஒப்புதல் கையெழுத்தை இடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
  • இதனைத் தொடர்ந்து இன்று மாலையே அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் நாளை வாடிவாசலில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் இதனைத் தொடக்கி வைக்க பன்னீர் செல்வம் மதுரை செல்வார் என்றும் தெரிகின்றது.
  • இதற்கிடையில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காணொளி வடிவத்தில் (வீடியோ) தனது உரையை வெளியிட்டு, மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
  • நடிகர் சூர்யா பீட்டா இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கான சட்ட அறிவிக்கையை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
  • இசையமைப்பாளர் அனிருத்தும் ‘தமிழனாக இந்த மண்ணில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்’ என்று கூறி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார்.
#TamilSchoolmychoice

jallikattu-crowd-lady feedingஇதுபோன்ற உருக்கமான – தமிழர்களின் ஒற்றுமை உணர்வை எடுத்துக்காட்டும் – காடசிகளும் அவ்வப்போது போராட்டக் களங்களில் அரங்கேறி வருகின்றன…

  • மெரினாவில் ஆயிரக்கணக்கானோர் இன்னும் கட்டுக் குலையாமல் திரண்டு, தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
  • மதுரை வாடிவாசல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். எப்போது சொன்னாலும் நடத்துவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக மாவட்ட ஆணையர்  (கலெக்டர்) அறிவித்துள்ளார்.
  • தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் மதுரை செல்வதற்கு தயாராகி வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-செல்லியல் தொகுப்பு