Home Featured தமிழ் நாடு “குழப்பவாதிகள் இருக்கத் தான் செய்வார்கள்” – ஆதிக்கு சமுத்திரக்கனி பதில்!

“குழப்பவாதிகள் இருக்கத் தான் செய்வார்கள்” – ஆதிக்கு சமுத்திரக்கனி பதில்!

956
0
SHARE
Ad

Samuthirakaniசென்னை – ஹிப்ஹாப் தமிழா ஆதியின் திடீர் அறிவிப்பு தனக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

“மக்கள் கூடும் இடங்களில் சில குழப்பவாதிகளும் கூடி ஒற்றுமையை கலைக்கத் தான் பார்ப்பார்கள். ஆனால் நாம் தான் அதனை முறியடிக்க வேண்டும். கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றி வருகின்றேன். எல்லா இடங்களிலும் போராட்டம் முறையாக தான் நடக்கிறது. எனவே போராட்டத்தில் உடன்பாடு இல்லாத பட்சத்தில் அமைதியாக இருப்பது நல்லது” என்று ஆதிக்கு சமுத்திரக்கனி பதில் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹிப்ஹாப் தமிழா ஆதி வெளியிட்ட அறிவிப்பில், போராட்டம் சில தரப்பினரால் திசை மாறிச் செல்வதாகக் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.