கூச்சிங் – மறைந்த முன்னாள் சரவாக் முதல்வர் டான்ஸ்ரீ அட்னான் சாத்திமால் கொண்டுவரப்பட்ட ஆங்கிலத்தை இரண்டாம் அதிகாரப்பூர்வ மொழியாக்கும் திட்டத்தை தான் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவிருப்பதாக சரவாக்கின் புதிய முதல்வர் டத்தோ அமர் அபாங் ஜோஹாரி துன் ஓபெங் அறிவித்துள்ளார்.
“நமது கல்விமுறை இன்னும் திறந்த நோக்கத்துடனே இருக்கின்றது. நாம் சரவாக்கில் இருக்கின்றோம். நமது ஆங்கிலம் இன்னும் சிறப்பாக தான் உள்ளது. அதனால் தான் மறைந்த தோக்னான் (அட்னான்) மலாய் மொழி, ஆங்கிலம் இவை இரண்டும் சரவாக்கின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தார்.”
“புதிய முதல்வரான நான் அந்தக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவேன். சரவாக்கில் ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவே தொடர்ந்து இருக்கும்” என்று அபாங் ஜோஹாரி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தெரிவித்தார்.