Home Featured தமிழ் நாடு ‘முதல்வரிடம் பேசியிருக்கிறேன்’ – கமல்ஹாசன் தகவல்!

‘முதல்வரிடம் பேசியிருக்கிறேன்’ – கமல்ஹாசன் தகவல்!

742
0
SHARE
Ad

Kamal-Haasan-Oscarசென்னை – ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சென்னை, கோயம்பத்தூர் என பல்வேறு இடங்களில் காவல்துறையினரால் தாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருவதைக் கண்டித்து வரும் நடிகர் கமல்ஹாசன், தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், தமிழக முதல்வருடன் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அறிவித்துள்ளார்.

அவரிடம் கேள்விகள் பல தொடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் பதிலளிப்பார்கள் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் போராட்டக்காரர்களை திருப்திபடுத்தும் நோக்கத்திலேயே இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.