சிங்கப்பூர் – சிங்கப்பூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செம்பாவாங் பூங்காவில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய 30 பேர் மீது சிங்கப்பூர் காவல்துறை விசாரணை நடத்தவுள்ளது.
இது குறித்து சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று முன்தினம் செம்பாவாங் பூங்கா பகுதியில் சுமார் 30 பேர் கூடி கையில் பதாகைகளுடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினர் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும். தங்கள் நாட்டுப் பிரச்சினைகளை சிங்கப்பூருக்குள் கொண்டு வரக் கூடாது. அதோடு முறையான அனுமதியின்றி சிங்கப்பூரில் பொது இடங்களில் கூடுவது சட்டத்துக்குப் புறம்பானது” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சட்டத்தை மீறியவர்கள் விசாரணை செய்யப்பட்டு, அவர்களின் வேலை அனுமதி நீக்கப்படலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.