கோலாலம்பூர் – அமெரிக்காவிற்குப் பறப்பதற்கு ஏர் ஆசியா எக்ஸ் கூட்டரசு வான்போக்குவரத்து ஆணையத்திடமிருந்து அனுமதி பெற்றுவிட்டது.
இதன் மூலம், ஆசியாவிலேயே அமெரிக்காவிற்கு பயணிகள் விமானத்தை இயக்குவதற்கு அனுமதி பெற்ற முதல் மலிவு விலை விமான நிறுவனம் என்ற பெருமையை ஏர் ஆசியாஅடைகின்றது.
மேலும், இந்த அனுமதி மூலம் அமெரிக்காவின் எந்த ஒரு இடத்திற்கும் மலிவு விலை விமானச் சேவையை ஏர் ஆசியா வழங்க முடியும் என்று அதன் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி கமாருடின் மெரானுன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஹாவாய் உள்ளிட்ட அமெரிக்க மாகாணங்களுக்கு விமானச் சேவை வழங்க ஏர் ஆசியா திட்டமிட்டு வருகின்றது.
“ஏர் ஆசியா எக்ஸ் வரலாற்றில் இது ஒரு மிகப் பெரிய மைல் கல்” என்றும் கமாருடின் தெரிவித்துள்ளார்.