Home Featured நாடு அன்வாருக்காக அரச மன்னிப்பு கேட்க குடும்பத்தினர் சைபுலை அணுகினரா?

அன்வாருக்காக அரச மன்னிப்பு கேட்க குடும்பத்தினர் சைபுலை அணுகினரா?

843
0
SHARE
Ad

Saiful-Bukhari-Feature

கோலாலம்பூர் – தன்னை ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக சைபுல் புகாரி அஸ்லான் குற்றச்சாட்டுகள் சுமத்தியதைத் தொடர்ந்து தற்போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

அன்வார் இப்ராகிமின் குடும்ப உறுப்பினர்கள் தன்னை அணுகி, அன்வார் இப்ராகிம் சார்பில் அரச மன்னிப்பு கோருவதற்கு தன்னைக் கேட்டுக் கொண்டதாக சைபுல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அன்வாருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் தன்னை அணுகி, தான் அன்வார் குடும்பத்தைப் பிரதிநிதிப்பதாகக் கூறி, நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு, குற்றச்சாட்டை சுமத்தியவர் என்ற முறையில் மாமன்னரிடம் அன்வாருக்கு விடுதலை வழங்கக் கோரி விண்ணப்பம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் என சைபுல் கூறியுள்ளார். ஆனால் உண்மையிலேயே அவர் அன்வார் குடும்பத்தைப் பிரதிநிதித்து வந்தாரா என்பது தெரியாது என்றும் சைபுல் கூறியுள்ளார்.

தனது முந்தைய வாக்குமூலங்களையும், குற்றச்சாட்டுகளையும் தான மீட்டுக் கொள்ள வேண்டியதில்லை என்றும் தான் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் சைபுல் மேலும் கூறியுள்ளார்.

எனினும் அன்வாரின் குடும்பத்தினர் சைபுலின் கூற்றை மறுத்துள்ளனர்.

அன்வாரின் மகளான நுருல் நுஹா சைபுல், அவதூறு கூறுகின்றார் என்றும் தனது குடும்பத்தினர் யாரும் சைபுலைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.