கோலாலம்பூர்- பிப்ரவரி மாதம் எண்ணெய் விலை உயர்வதாக மலேசிய பெட்ரோல் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் டத்தோ கைருல் அனுவார் அப்துல் அசிஸ் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இந்த புதிய விலையின் படி, ரோன் 95, ரோன் 97 இரக எண்ணெய் 20 காசுகள் உயர்ந்து, முறையே, லிட்டர் 2.30 ரிங்கிட், 2.60 ரிங்கிட் என விற்பனை செய்யப்படவுள்ளது.
அதே வேளையில், டீசல் விலை 10 காசுகள் உயர்ந்து லிட்டர் 2.15 ரிங்கிட்டாக விற்பனை செய்யப்படவுள்ளது.
ஜனவரி மாத விலைப்பட்டியல் படி, ரோன் 95 லிட்டர் 2.10 ரிங்கிட்டும், ரோன் 97 லிட்டர் 2.40 ரிங்கிட்டும், டீசல் லிட்டர் 2.05 ரிங்கிட்டும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.