Home Featured இந்தியா மயங்கி விழுந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் இ.அகமது காலமானார்!

மயங்கி விழுந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் இ.அகமது காலமானார்!

1214
0
SHARE
Ad

ahamed-indian MP-passes awayபுதுடில்லி – நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவருமான இ.அகமது (படம்) இன்று புதன்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

78 வயதான அகமது முன்னாள் அமைச்சருமாவார். மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா நல்லுறவுகளை வளர்ப்பதில் அகமது முக்கிய பங்காற்றியுள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார்.

இன்று தொடங்கும் இந்திய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அகமதுவுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.