Home Featured தமிழ் நாடு அன்புமணி ராமதாசுக்கு நெஞ்சுவலி – பெங்களூரில் சிகிச்சை!

அன்புமணி ராமதாசுக்கு நெஞ்சுவலி – பெங்களூரில் சிகிச்சை!

789
0
SHARE
Ad

ANBUMANI RAMADOSS_0சென்னை – பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு நேற்று வெள்ளிக்கிழமை லேசான மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் உடனடியாக பெங்களூர் நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

முன்னதாக, தர்மபுரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அங்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்றதாகவும், ஆனால் அம்மருத்துவமனையின் பரிந்துரையின் படி அவர் அங்கிருந்து பெங்களூர் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice