Home Featured நாடு மீட்கப்பட்ட சடலம் சபா படகு விபத்தின் பயணிதானா?

மீட்கப்பட்ட சடலம் சபா படகு விபத்தின் பயணிதானா?

615
0
SHARE
Ad

கோத்தாகினபாலு – சபா மெங்காலும் தீவு நோக்கி சென்று கொண்டிருந்தபோது மூழ்கிய உல்லாசப் படகில் இருந்த பெண் பயணி என்று நம்பப்படுபவரின் சடலம் நேற்று சனிக்கிழமை காலை கடலில் இருந்து மீட்கப்பட்டது.

மெங்காலும் தீவுப் பகுதிக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கிய – அழுகிய நிலையில் இருந்த – அந்த சடலம் காணாமல் போன பயணியின் சடலம்தானா என்பதை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

sabah-boat tragedy-body recoveredகடலில் கண்டெடுக்கப்பட்ட சடலம் மீட்கப்படுகின்றது (படம்: நன்றி – ஸ்டார் இணையத் தளம்)

#TamilSchoolmychoice

பயணிகளில் இதுவரை ஆறு பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2,000 சதுர கடல் மைல் பகுதியில் கடந்த 9 நாட்களாக தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணிகளில் 15 கப்பல்களும் சுமார் 400 பேர் கொண்ட மீட்புக் குழுவினரும் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

20 பயணிகளும், 2 படகுப் பணியாளர்களும் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 3 பயணிகள் இதுவரை மரணமடைந்துள்ளனர்.