கோத்தாகினபாலு – நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மற்றொரு படகு சபா கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மலேசிய கடலோர அமுலாக்க இலாகா மீட்புப் பணிகளை இரவு 8.30 மணியளவில் தொடக்கியது.
15 பேர் பயணம் செய்த இந்த படகில் இருந்த 13 பேரைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும்அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்து பாயுங் பகுதியில் இருந்து இந்தோனிசியாவின் சுங்கை நியாமோக் என்ற நகர் நோக்கி அந்தப் படகு சென்று கொண்டிருந்தது.
இந்தப் படகு விபத்துக்குள்ளாகி 24 மணி நேரம் கழித்துத்தான் புகார் செய்யப்பட்டுள்ளதால் தேடும் பணிகளும், மீட்புப் பணிகளும் பெரும் சவாலாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளானர்.
படகில் பயணம் செய்த பயணிகளில் ஓர் ஆணும், பெண்ணும் மட்டும் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளனர்.