Home Featured தமிழ் நாடு “தர்மயுத்தம் தொடரும்” – ஓபிஎஸ் சூளுரை!

“தர்மயுத்தம் தொடரும்” – ஓபிஎஸ் சூளுரை!

695
0
SHARE
Ad

OPSசென்னை – எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக பதவி ஏற்க ஆளுநர் வித்யாசாகர் ராவ், அனுமதி வழங்கியதை அடுத்து, இன்று வியாழக்கிழமை மாலை அவர் தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சற்று முன்னர் அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதில் பன்னீர் செல்வம் பேசுகையில், “ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழகத்தை மீட்டு, மக்களாட்சி நிலவும் வரை, எங்களது தர்மயுத்தம் தொடரும். எனக்கு ஆதரவளித்து என் பின்னே இருக்கும் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice