Home Featured கலையுலகம் இன்ஸ்டாகிராம் பதிவுகள்: ஜேக்கி சான்னுடன் கலக்கும் டிஷா பட்டானி!

இன்ஸ்டாகிராம் பதிவுகள்: ஜேக்கி சான்னுடன் கலக்கும் டிஷா பட்டானி!

1381
0
SHARE
Ad

Dishapatani04

அண்மையில் சீனப் பெருநாள் வெளியீடாக வெளிவந்து உலகம் முழுவதும் வசூலில் கலக்கி வரும் படம் ஜேக்கி சான்னின் ‘குங்பூ யோகா’. வழக்கமான ஜேக்கி சான் படங்களைப் போன்று அவருக்கே உரிய பாணியில், இந்தியாவில் இருக்கும் அரிய விலைமதிப்பில்லா கலைப் பொக்கிஷங்களைத் தேடிச் செல்லும் அகழ்வாராய்ச்சி பேராசிரியராக நடித்திருக்கிறார் ஜேக்கி சான்.

வித்தியாசம் என்னவென்றால், ஜேக்கி சான் பேராசிரியர் குங்பூ சண்டைக் கலையிலும் வல்லவர்.

#TamilSchoolmychoice

Dishapatani03குங்பூ யோகா படக் குழுவினருடன் டிஷா பட்டானி….

படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் பல தமிழ், இந்திப் படங்களில் வில்லனாக வந்து அசத்திய சோனு சூட்.

குங்பூ யோகா படத்தில் இரண்டு இந்தியக் கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர். இருவரில் ஒருவர் அமைரா டஸ்தூர். யார் என்று நீங்கள் நினைவுபடுத்துவதற்கு, தனுஷ் நடித்த ‘அநேகன்’ படத்தைக் கொஞ்சம் ஞாபகத்திற்குக் கொண்டு வாருங்கள். அதில் கதாநாயகியாகவும் ரங்கூன் பெண்ணாகவும் நடித்திருந்தாரே அவர்தான் அமைரா டஸ்தூர்.

இன்னொரு இந்தியக் கதாநாயகிதான் டிஷா பட்டானி. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது அழகுப் படங்களை இரசிகர்களுக்கு வெளியிட்டு வருபவர்.

Dishapatani01

குங்பூ யோகா படத்தில் இந்திய இளவரசியாகவும், யோகா கலை நன்கறிந்தவராகவும் நடித்து அசத்தியிருக்கிறார் டிஷா பட்டானி.

குங்பூ யோகா படம் பார்த்தவர்கள் இந்த அழகு மயிலையும் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என குறிப்பாக இந்திப் பட இரசிகர்கள் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.

ஆம்! சில இந்திப் படங்களின் கதாநாயகியான இவர் அண்மையில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையைச் சொல்லும் படமாக வெளிவந்த “எம்.எஸ்.தோனி அண்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

டைகர் ஷரோப்புடன் இவர் இணைந்து நடித்து வெளியான ‘பிஃபிக்ரா’ (Befikra) என்ற காணொளி இசைப்பாடல் யூடியூப் தளத்தில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

Dishapatani08

விளம்பர அழகியாகவும் (மாடல்), யோகாக் கலையில் வல்லவராகவும் திகழும் டிஷா அண்மையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவுகள் இவை.

Dishapatani07குங்பூ யோகா படக் கதாநாயகன் ஜேக்கி சான் மற்றும் இயக்குநர் ஸ்டான்லி தோங் ஆகியோருடன் டிஷா….

Dishapatani06

கவர்ச்சியிலும் கலக்கி வருபவர் டிஷா என்பதற்கு சான்று அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் அவரது புகைப்படங்கள்.

கொஞ்ச காலம் பொறுத்திருங்கள்! யாராவது ஒரு கதாநாயகன் தமிழ்ப் படங்களில் தனக்கு இணையாக நடிப்பதற்கு டிஷா பட்டானியை இழுத்து வருவார் என்று நிச்சயம் நம்பலாம்!

Dishapatani02

-செல்லியல் தொகுப்பு