Home Featured இந்தியா மும்பையில் சிவசேனாவைத் சிதறடித்த பாஜக!

மும்பையில் சிவசேனாவைத் சிதறடித்த பாஜக!

861
0
SHARE
Ad

Mumbai.city png

மும்பை – பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற மும்பை மாநகராட்சி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தல்களில் மாநிலத்தின் முன்னணி அரசியல் சக்தியாகத் திகழ்ந்த சிவசேனா கட்சியைத் தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

10 நகராட்சிகளில் 8 நகராட்சிகளை பாஜக கைப்பற்றி சாதனை புரிந்துள்ள வேளையில் மும்பை மாநகராட்சியில் உள்ள 227 தொகுதிகளில் சிவசேனா 84 தொகுதிகளையும், பாஜக 81 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.

#TamilSchoolmychoice

மும்பையைத் தங்களின் முக்கிய அரசியல் தளமாகக் கொண்டு செயல்படும் சிவசேனாவுக்கு இந்தத் தோல்வி பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.

பாஜக-சிவசேனா இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதலில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சிதான். மும்பையில் வெறும் 31 இடங்களில் மட்டுமே அந்தக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

devendra fadnavis-raj thakareபாஜகவின் மகராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் – சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

தற்போது அடுத்த மாநகராட்சித் தலைவராக (மேயர்) யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற மோதலில் பாஜகவும், சிவசேனாவும் ஈடுபட்டுள்ளன.

வழக்கமாக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் பாஜக இந்த முறை, கூட்டணி உடன்பாடு பேச்சுவார்த்தைகள் முறிந்ததால், அந்த இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன.

உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்ற பத்து நகராட்சிகளில், 8 தொகுதிகளில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றது.

மும்பையில் இரண்டாவது நிலைக்கு வந்துள்ளது பாஜக.

இந்த வெற்றிகளைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக – கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகின்றார்.