Home Featured தமிழ் நாடு தமிழக மீனவர் சுட்டுக் கொலை – இலங்கைக்கு இந்தியா கண்டனம்!

தமிழக மீனவர் சுட்டுக் கொலை – இலங்கைக்கு இந்தியா கண்டனம்!

981
0
SHARE
Ad

fishermen2-07-1488868563சென்னை – ராமேஸ்வரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், இச்சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்திருக்கிறது.

இது குறித்த தற்போதைய செய்திகள்:

#TamilSchoolmychoice

1. மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் தங்கச்சிமடம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

2. பதற்ற நிலை நீடிப்பதையடுத்து, தமிழகத்தில் இலங்கை நிறுவனங்களுக்கு பலத்த காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

3. இறந்த மீனவரின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாயும், காயமடைந்த மீனவருக்கு 1 லட்ச ரூபாயும் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார். இலங்கையின் இச்செயலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

5. மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இலங்கைத் தூதரகம் மூலம் இந்திய வெளியுறவுத்துறை தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.

6. இந்தியாவின் கண்டனத்தையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதியளித்திருக்கிறார்.